ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி நேற்று அனைத்து அணிகளின் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியானது.
மினி ஏலத்திற்குமுன் தேவையில்லாத வீரர்களை கழற்றிவிட்டது மூலம் அணிகளுக்கு பெரும் தொகை மீதமாகியிருக்கிறது. அந்த தொகையை வைத்து மினி ஏலத்தில் தரமான வீரர்களை வாங்க திட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், மேகரூன் கிரீன் போன்ற ஆல்-ரவுண்டர்கள்தான் அணிகளுக்கு தேவை என்பதால், இவர்கள் 10 கோடிக்கு மேல் ஏலம் போக வாய்ப்புள்ளது.
குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் 16 கோடிக்கும் மேல் ஏலம் போக வாய்ப்புள்ளது.இதில் பென் ஸ்டாக்ஸை வாங்கும் அளவிற்கு பணம் இரண்டு அணிகளிடம் தான் உள்ளது.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் மீதம் 42.2 கோடி இருக்கிறது. அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 32.23 கோடி இருக்கிறது. மற்ற அணிகளிடம் 24 கோடிக்கும் குறைவான தொகைதான் இருக்கிறது.

இதனால், இந்த அணிகள்தான் பென் ஸ்டோக்ஸை வாங்க தாராளமாக 16 கோடிக்கும் மேல் ஏலம் கேட்க வாய்ப்புகள் இருக்கிறது.