கமல்ஹாசன்- ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இந்தியன். எனவே அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கப்போவதாக கடந்த 2017 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டு 2018 ஆண்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டது.
தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தது.மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஷங்கர் தெலுங்கு படத்தை இயக்க செல்ல, கமல் அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என பிஸியானார்.
எனவே இப்படம் கைவிடப்பட்டதாக ரசிகர்கள் எண்ணிய நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிவிழாவில் இப்படத்தை துவங்குவேன் என கமல் உறுதியளித்தார்.அதைப்போலவே பிரச்சனைகளுக்கு எல்லாம் சுமுகமான தீர்வு எட்டப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனங்களை ஷங்கர் நீக்கிவிட்டதாக தகவல் வந்துள்ளது.ஏனென்றால் இப்படத்தின் இணைத்தயாரிப்பாளராக உதயநிதி தற்போது இணைந்துள்ளதால் அரசியல் வசனங்களை ஷங்கர் நீக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.