தூத்துக்குடிக்கு தண்ணீர் கொண்டு வந்த முதல் நகர மன்ற தலைவர் குருஸ் பர்னாந்தின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மீனவர் நலன், மீன்வள துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் தூத்துக்குடியின் மையப்பகுதியில் உள்ள குருஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதும் கைது செய்யும் நிலையும் படகுகளை விடுவிக்காத நிலையும் உள்ளது.
இந்நிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
மீனவர்களையும் படகுகளையும் மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார் என்றார்.