தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார் .
டெல்லி சென்றடைந்த அவர் இன்று காலை 10:30 மணி அளவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறினார். குடியரசு துணை தலைவரை சந்தித்தபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஹோம் ஆப் செஸ் என்ற புத்தகத்தை அவருக்கு பரிசாக கொடுத்தார் .
இந்நிலையில், தற்போது குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.