தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்றைய தினம் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். சேலத்தில் 2 நாள் முகாமிடும் முதல்வர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட அரசு நிர்வாக செயல்பாடுகள், சட்டம், ஒழுங்கு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ள போகிறார். முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு சேலத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். மேலும் இனிவரும் நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
