நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் கோவில் உள்ளது. இந்த கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா நடைபெறும். சிங்காரவேலர் கோவிலில் உள்ள வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு சிறப்புகள் பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது விழாவின் ஒவ்வொரு நாளும் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேத சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவர் தங்கமயில், ரிஷப, நாகபரணம் வாகனம், மோகினி, வேணுகோபால சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தேரில் ஸ்ரீ சிங்காரவேலர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.