ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது.
ஆண்களையும் பெண்களையும் இணைக்கும் அன்பின் அடையாளமாகவும் மதம், சாதி போன்ற பிளவுகளை இணைக்கு பாலமாகவும் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா இந்தியாவின் கலாசார பெருமையை எடுத்துக்கூறும் சிறப்பான நிகழ்வுகளில் ஒன்றாகும் .
ரக்ஷா பந்தன் விழா அன்று பெண்கள், தங்கள் சகோதரர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவர்கள் கரங்களில் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். இக்கயிறை அணிந்துகொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பெண் குழந்தைகளுடன் பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார். பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தோட்டக்காரர்கள், டிரைவர்கள் மற்றும் பிற பணியாளர்களின் குழந்தைகள் பிரதமர் மோடியின் கையில் ராக்கி கயிறுகளை கட்டி ரக்ஷா பந்தணை கொண்டாடினர்.
#WATCH | Prime Minister Narendra Modi celebrated #RakshaBandhan with young girls today at his residence in Delhi.
— ANI (@ANI) August 11, 2022
This was a special Rakshabandhan as these girls were the daughters of sweepers, peons, gardeners, drivers, etc working at PMO.
(Video Source: PMO) pic.twitter.com/eSvd6gsgHb