தைவான் நாட்டின் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தைவான் அரசு, சீனாவுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக அந்நாடு குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் கடும் எதிர்பபையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலுசி நேற்று தைவான் சென்றார்.
பெலுசியின் பயணம் ஒரே சீனா என்ற கொள்கையை மீறிய செயல் என கண்டனம் தெரிவித்துள்ள சீனா, இதனை காரணமாக வைத்து தைவான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக தான் நேற்று தைவான் மீது ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை சீனா அதிகரித்துள்ளது.

தொடர்ந்து தைவான் எல்லையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 21 சீன போர் விமானங்கள் தைவான் எல்லையை சுற்றி வருகின்றன. அதேபோல் தைவான் எல்லையில் சீனா போர் கப்பல்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இது சீனாவின் போர் முன்னோட்டம் என கூறப்படுகிறது. அத்துடன் தைவானை சுற்றி வளைத்து நடத்தும் பயிற்சிகள் உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதைகளில் நடைபெறும் என சீனா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு, அமைதியை சீர்குலைக்கும் அபாயம் உள்ளதாக ஜி 7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இருப்பினும் தொடர்ந்து, தைவானை சுற்றியுள்ள கடல் பகுதி முழுவதிலும் தனது போர்க் கப்பல்களை நிறுத்தி ஏவுகணைகளை வீசி அச்சுறுத்தியுள்ளது. சீனாவின் இந்த போர் பயிற்சி அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் தென் சீனக் கடலில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. ஒருவேளை தைவான் மீது சீனா போர் தொடுத்தால், அது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் முடங்க வைக்கும் என அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
Can't say that having a holiday in China is nothing than blue sea, sandy coast and Chinese cuisine…
— Mr. WANG 🇨🇳🇪🇺 (former rep. th wildau 维尔道) (@TKnights773) August 4, 2022
Because sometimes it comes with awesome 东风 rocket airshows. 😉#ChinaTaiwanCrisis #Taiwan #China #Taiwanchina pic.twitter.com/nGGDLY65vG