தமிழ் சினிமாவில் தாராமான படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம். அண்மையில் வெளியான கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள 61-வது படத்தை பா.இரஞ்சித் இயக்கவுள்ளார்.
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாக கடந்தாண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் சென்னையில் துவங்கியது.
மேலும் இந்தப்படத்திற்கு ‘மைதானம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்த மாளவிகா மோஹனன் சீயான் 61 படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

மேலும் விரைவில் இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது