அரியலூர் – சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கீழப்பழுவூர் முதல் காட்டுமன்னார்கோயில் இன்று மற்றும் நாளை நடைபயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியினர் உற்சாகமாக ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், சோழர்களின் காலம் நீர்ப் பாசனத்தின் பொற்காலம்! அரியலூர் மாவட்டத்தில் சோழர்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள் வியக்க வைக்கக்கூடியவை. ஏராளமான ஏரிகளும் கால்வாய்களும் அமைக்கப்பட்டிருந்தன.சோழர் பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
#சோழர்பாசனத்திட்டம்
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 29, 2022
அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் இன்றும் நாளையும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்கிறேன்.#Anbumani4WaterManagement pic.twitter.com/1E4BohsXfO
அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் இன்றும் நாளையும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில் மக்களிடம் கிடைத்த வரவேற்பு , கட்சியினரிடையே ஏற்பட்ட உற்சாகம் ஆகியவை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக விவசாயிகளிடையே கிடைத்துள்ள வரவேற்பால் அவர் அடுத்த நீர்ப்பாசன திட்டங்களை கருத்தில் கொண்டு நடை பயண திட்டங்களை வகுத்து வருகிறார்.