விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் சேவூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . மேலும் கிராமத்தில் இருந்து அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் திண்டிவனம் சென்று கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து கீழ் சேவூர் கிராமத்திற்கு செல்லும் பேருந்துகள் தொடர்ந்து வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் தற்போதுஆவணிப்பூர் யில் இருந்து வரும் பேருந்தும் ஒரு சில நாட்களில் கீழ் சேவூர் கிராமத்திற்கு வரவில்லை எனவும் மாலை நேரங்களில் பேருந்து சரி வர வராததால் இரவு 8 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் வீட்டிற்கு வருவதாகவும் கூறி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவணிப்பூரில் இருந்து வந்த பேருந்தையும், அதேபோல திண்டிவனத்தில் இருந்து ஆவணிப்பூர் வந்த இரண்டு அரசு பேருந்தையும் சிறப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் பணிமனை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 2 அரசு பேருந்தையும் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.