காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தனியார் மதுக்கடை ஒன்றில்,நள்ளிரவு 2 மணி அளவில் அங்கு வந்த 2 பேர் மதுக்கடையை திறக்குமாறு காவலாளியிடம் வற்புறுத்தியுள்ளனர் . காவலாளி மறுக்கவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை சரமாரியாக தாக்கி, கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபான பாட்டில்களை திருடிகொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில்,திருநள்ளாறு அருகேவுள்ள விழிதியூரை சேர்ந்த ஜெகன் , நளன்குளம் பகுதியை சேர்ந்த தன்ராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.