தமிழ் சினிமாவில் நடிகராகவும் ,தயாரிப்பாளராகும் வெற்றிநடைபோடுபவர் தான் உதயநிதி.இவர் நடிப்பில் சமீபத்தில் கலகத்தலைவன் திரைப்படம் வெளியாகிவுள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி செய்யும் போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கலகத் தலைவன் படம் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு அவர் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்கிறார்.
அமைச்சரிடம் கலகத் தலைவன் படத்தை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிவ்யூ கேட்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மேலும் கலகத் தலைவன் படத்தின் ரிலீசுக்கு முந்தைய நாள் தமிழக முதல்வர் தனது மனைவி துர்காவுடன் சேர்ந்து இப்படத்தின் ஸ்பெஷல் ஷோவை பார்த்தார்.
உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் குறித்து அமைச்சரிடம் ரிவியூ கேட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் #mkstalin |#UdhayanidhiStalin |#Kalakathalaivan pic.twitter.com/VUKYMJszmW
— Tamil Diary (@TamildiaryIn) November 21, 2022
படம் பார்த்து முடித்ததும் அருமையாக இருப்பதாக இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் உதயநிதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து படம் வெற்றி பெற வாழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது