தமிழ் சினிமாவில் தரமான அதே சமயம் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் படங்களை எடுத்து முன்னணி இயக்குனர் அந்தஸ்தை பெற்றவர் செல்வராகவன். இன்று உலகம் அறிந்த நடிகராக திகழும் தனுஷை தன் இயக்கத்தின் மூலம் செதுக்கியவர் தான் செல்வராகவன். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் தனுஷை நடிப்பு அசுரனான உருவாக்கினார் செல்வராகவன்.
இந்நிலையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தில் அவரது தம்பியான நடிகர் தனுஷ் நடித்துள்ளார். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து தனது தம்பியை வைத்து இயக்கிருக்கிறார் செல்வராகவன். இந்தப் படம் நாளை மறு நாள் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் திடீரென இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார்.
இதனால் செல்வராகவனின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினுடன் தங்களின் குடும்பத்தினர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள செல்வராகவன், தமிழக முதல்வர் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
When honourable C.M visited our family 😍😍 what a special meeting 🙏🏼🙏🏼 pic.twitter.com/kuLKoLD7k8
— selvaraghavan (@selvaraghavan) September 26, 2022
இருப்பினும் முதலமைச்சர் என்ன காரணத்திற்காக செல்வராகவனின் இல்லத்திற்கு சென்றார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.