உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.அவருக்கு திரையுலகை சார்ந்தோரும் ,ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கமலுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், “தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!” என குறிப்பிட்டுள்ளார்.
தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், @maiamofficial கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) November 7, 2022
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!