துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள மாகாணம் பர்டின். இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது.
அச்சுரங்கத்தில் நேற்று மாலை வழக்கம்போல 110-க்கும் மேற்பட்டோர் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.

ஆனாலும், வெடிவிபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுரங்கத்திற்குள் சிக்கிய எஞ்சியோரை மீட்பும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.