தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல காமெடி நடிகர் சிவ நாராயணமூர்த்தி. தமிழில் பூந்தோட்டம் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், அடையாளத்திற்காக தன்னுடைய ஊரான பட்டுக்கோட்டை என்பதையும் பெயரோடு இணைத்து கொண்டார்.
தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், அஜித், விஜய், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடனும்… வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடனும் இணைந்து பல படங்களில் காமெடி வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
RIP comedy actor #SivaNarayanamoorthy pic.twitter.com/NW5w4wjrYm
— Rajasekar (@sekartweets) December 8, 2022
இவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நல குறைவு காரணமாக தன்னுடைய சொந்த ஊரில் தங்கி சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று இரவு 8:30 மணிக்கு உடல்நல குறைவால் காலமானார். 67 வயதாகும் இவர் தமிழில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.