22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி கோலாகலமாக தொடக்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . 72 நாடுகளில் இருந்து சுமார் 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதில் இந்தியா தற்போது வரை 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.
6-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கத்துக்கான சுற்றில் இன்று விளையாடினார்.

விறுவிறுப்பான இந்த போட்டியில் துலிகா மான், ஸ்காட்லாந்து வீராங்கனையிடம் வீழ்ந்தார். இதன்மூலம் துலிகா மான் வெள்ளி வென்றார். அவரின் வெற்றியால் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.