22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து முடிவடைந்த நிலையில் இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் வீரர், வீராங்கனைகள் களமிறங்கி 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து இந்தியா பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்துள்ளது .

இந்த போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸினின் நட்சத்திர வீரர் ‘சரத் கமல்’ 3 தங்கம் ,1 வெள்ளி என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளார் . இந்த காமன்வெல்த் போட்டியில் அவர் முதலில் டேபிள் டென்னிஸ் ஆடவர் குழு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் சக தமிழக வீரர் ‘சத்யன்’ உடன் இணைந்து வெள்ளி மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் ‘ஸ்ரீஜா அகுலா’-வுடன் இணைந்து மற்றொரு தங்கமும் வென்றுள்ளார். இதை தொடர்ந்து ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் களமிறங்கி மீண்டும் ஒரு தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் சரத் கமல் இன்று சென்னை திருப்பிய நிலையில் அவருக்கு விமான நிலையத்தில் மிக பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.