இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி ஆரம்பித்து நேற்று முன்தினம் (ஆக. 8 ) நிறைவடைந்தது. இந்தியா வீரர்கள் காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்று தாய்நாட்டிற்காக பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர் .15 தங்கம், 12 வெள்ளி மற்றும் 22 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் இந்தியா 4ஆம் இடத்திற்கு நுழைந்தது.
இந்நிலையில் தற்போது லண்டனில் காமன்வெல்த் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதில், பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது . இதில் வாள்வீச்சு இறுதிபோட்டியில் சீனியர் பெண்கள் சேபர் பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி அட்டகாசமாக ஆடி ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை வீழ்த்தினார் .

ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை வீழ்த்தியதன் மூலம் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தாய்நாட்டிற்காக நாடு விட்டு நாடு சென்று பதக்கம் வென்ற அந்த வீரமங்கைக்கு நாடு மக்கள் அனைவரும் வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர்