தனுஷ், சிம்பு, சந்தானம் பல நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமானவர் தான் கூல் சுரேஷ். பிரபல காமெடி நடிகராக வலம் வரும் கூல் சுரேஷ் மாநாடு படத்திற்கு பிறகு இணையத்தில் மேலும் பிரபலமானார்.
சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் போது உணர்ச்சிவசப்பட்டு பேசினார் கூல் சுரேஷ். மேலும் வெந்து தணிந்தது காடு படத்தின் டைட்டிலை பிரபலமாக்கியத்தில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. எங்கு சென்றாலும் வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு என்ற வாசகத்தை தவறாமல் கூறிவந்தார் கூல் சுரேஷ்.
இதன் காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தனக்கு உதவி செய்து வரும் நடிகரை பற்றி பேசியுள்ளார் கூல் சுரேஷ். அவர் கூறியதாவது, எங்கு சென்றாலும் எனக்கு வருமானம் எப்படி வருகிறது என்று கேட்கின்றார்கள்.

எனக்கு தற்போது உதவி செய்து வரும் ஒரே நடிகர் சந்தானம் தான்.என் மீது அளவுகடந்த அன்பு கொண்ட சந்தானம் என்னை எந்த சூழலிலும் விட்டுக்கொடுத்ததில்லை. அவர் மட்டுமே இன்று எனக்கு உதவி செய்து வருகின்றார் என்றார் கூல் சுரேஷ்.