சிம்பு நடிப்பில் கௌதம் மேனனின் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சிம்பு படத்தில் தன் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி தான் ஏன் இன்றளவும் முன்னணி ஹீரோவாக இருக்கின்றேன் என்பதை நிரூபித்துள்ளார் என்றும், சிம்பு மற்றும் கௌதம் மேனன் இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை காண நடிகர் கூல் சுரேஷ் திரையரங்கிற்கு வந்த போது அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சிம்புவின் நண்பரும், பிரபல நகைச்சுவை நடிகருமான கூல் சுரேஷ் ஒவ்வொரு படத்தின் போதும் திரையரங்கிற்கு சென்று அப்படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் அளிப்பார். அதன் காரணமாகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
அதே போல வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்கவும் திரையரங்கிற்கு விலை உயர்ந்த காரில் சென்றுள்ளார் கூல் சுரேஷ். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். அப்போது சில ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு காரின் மீது ஏறியதால் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
#VendhuThanindhathuKaadu Celebrationshttps://t.co/9El32TlLJ8#coolsuresh #vtk #vtkfromtoday #SilambarasanTR #str
— Jeevakaran T (@TJeevakaran) September 15, 2022
@ pic.twitter.com/oltPIbm2In
மேலும் படத்தை பற்றி பேசிய கூல் சுரேஷ், படம் நன்றாக இருப்பதாகவும், படத்தின் நீளம் சற்று அதிகம் எனவும் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
🙄Cool Suresh-க்கு அபிஷேகம்‼️ VTK Movie Public Review ‼️ #VTKREVIEW #VTKFromSep15 #VTKFromTomorrow #Simbu #CoolSuresh #Atman pic.twitter.com/g7mfBhxN5b
— Saloon Talkies (@SaloonTalkies) September 15, 2022