தமிழில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். அதைவிட கடந்தாண்டு மாநாடு படத்திற்கு பிறகு மேலும் பிரபலமானார். வெந்து தணிந்தது காடு, சிம்புவிற்கு வணக்கத்தை போடு என்ற ஒற்றை வாசகத்தை வைத்து இணையத்தை அதிர வைத்தார் கூல் சுரேஷ்.
இந்நிலையில் சிம்பு தற்போது தன் அடுத்த படத்தில் கூல் சுரேஷ் நடிப்பதாக கூறியுள்ளார். சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்துள்ளது.
மேலும் மாநாடு படத்தை தொடர்ந்து இப்படமும் சிம்புவிற்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவரது மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது.இந்நிலையில் கடந்தாண்டு மாநாடு படம் வெளியானபோது நடிகர் கூல் சுரேஷ் திரையரங்கிற்கு வெளியே நின்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
அது ரசிகர்களிடையே வரவேற்பை பெற ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் அன்று திரையரங்கிற்கு வந்து படத்தைப்பார்த்து விட்டு அதைப்பற்றி பேசுவார்.பேசும்போது வெந்து தணிந்தது காடு, வணக்கத்தை போடு என்ற வாசகத்தை சேர்த்து தான் பேசுவார். இவ்வாறு வெந்து தணிந்தது காடு படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ந்ததில் கூல் சுரேஷிற்கு அதிகமான பங்கு உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் தனக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை என வேதனைப்பட்டு பேசினார் கூல் சுரேஷ். இதையடுத்து சிம்புவிடம் இதைப்பற்றி கேட்கையில், கூல் சுரேஷ் கண்டிப்பாக தன் அடுத்த படத்தில் நடிப்பார் என தெரிவித்தார். இதனையடுத்து கூல் சுரேஷின் ரசிகர்கள் இத்தகவலை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
#CoolSuresh in his next movie!!😀😀 STR is always the kindest ❤️#SilambarasanTR ❣️#VenthuThanindhathuKaadu pic.twitter.com/mS0oMQ6pIH
— ☃️ ℳsd பிசாசு 🦋 𝑽𝒋 👻 (@Star_Vijay7) September 19, 2022