சீனாவின் வூஹான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தோற்று பரவ தொடங்கியது. இந்த கொடிய வைரஸால் பொதுமுடக்கத்தை அறிவித்த சீனா இன்று வரை அதில் இருந்து மீள முடியாமல் துவைத்து வருகிறது .
நாளடைவில் இந்த வைரஸ் உலகம் முழுக்க பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது . இதற்கிடையில் பல நாடுகள் இதனை இந்த கொடிய வைரஸை சிறப்பாக கையாண்டது. பொதுமக்களும் தற்போது மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வருகின்றனர் .
இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இங்கு 3 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள். தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Workers have broken out of #Apple’s largest assembly site, escaping the Zero #Covid lockdown at Foxconn in #Zhengzhou. After sneaking out, they’re walking to home towns more than 100 kilometres away to beat the Covid app measures designed to control people and stop this. #China pic.twitter.com/NHjOjclAyU
— Stephen McDonell (@StephenMcDonell) October 30, 2022