2 ஆண்டிற்கு மேல் மொத்த உலகினை குலுக்கி எடுத்த கொரோனவின் தாக்கம் தற்போது குறைந்தாலும் அதனின் உயிரிழப்பு முழுமையாக நீங்கவில்லை. இந்த நிமிடம் வரி அதனின் பதிப்பு மற்றும் பலி எணிக்கை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த வகையில் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர் மற்றும் இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக, 1,946 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 34 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனவுக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 10 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5,28,923 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 4,40,79,485 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழந்தோர் விகிதமும் 1.18% ஆகவும், சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.06% ஆகவும் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,76,787 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் 219 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.