உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவாகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா மீதான பயம் இன்னும் சற்றும் குறையவில்லை என்றே சொல்லலாம்.
சீனாவின் ஷாங்காய் நகரில் 6 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றுவந்த நிலையில் அவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மாலுக்கு சீல் வைத்ததோடு உள்ளே இருந்த வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ சோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்த முடிவெடுத்த நிலையில், அதனைத் தெரிந்துகொண்டு அங்கிருந்த மக்கள் ‘என முண்டியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Yesterday, an abnormal health code case was presented at an IKEA in Shanghai, & the entire mall was suddenly blocked🥶
— Donna Wong💛🖤 (@DonnaWongHK) August 14, 2022
Some ppl forced their way out for fear of being sent to concentration camps, but there is actually nowhere to escape under #AmazingChina’s digital surveillance pic.twitter.com/MWpbTOJ3kz