கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகினையே உலுக்கிய எடுத்த சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தன் சற்று குறைந்துள்ளது. இந்த வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. ஆனால், சீனா கடும் கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 40 ஆயிரத்திற்கு சற்று குறைவாக, 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 36,082 பேர் அறிகுறியற்றவர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் சுகாதார ஆணையம் வெளியிட்டது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய நாளை விட அதிகமாகும். நேற்று முன் தினம் சீனாவில் 35,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
