Skygain News

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சற்று அதிகரித்த கொரோனா..!

2 ஆண்டிற்கு மேல் மொத்த உலகினை குலுக்கி எடுத்த கொரோனவின் தாக்கம் தற்போது குறைந்தாலும் அதனின் உயிரிழப்பு முழுமையாக நீங்கவில்லை. இந்த நிமிடம் வரி அதனின் பதிப்பு மற்றும் பலி எணிக்கை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் நேற்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,46,38,636 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 10 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,953 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,84,646 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 25,037 ஆக குறைந்துள்ளது. நாட்டில் நேற்று ஒரே நாளில் 4,90,711 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 219 கோடியை தாண்டியுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.