தர்மபுரி மாவட்டத்தில் 50 லிருந்து 60 நாட்டுத்துப்பாக்கிகள் கள்ளத்தனமாக புழக்கத்திலிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து எஸ்பி கலைச்செல்வன் உத்தரவின்பேரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் மலை அடிவார கிராமங்களில் நாட்டுத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலிசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனையடுத்து தொப்பூர் போலிஸ் லிமிட்டிற்க்குட்பட்ட கஸ்தூரிகோம்பை கிராமம் அருகே 2 நாட்டுத்துப்பாக்கி மற்றும் 1 ஏர்கன்னை மர்ம நபர்கள் வீசிச்சென்றனர். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மூலம் தகவல் கிடைக்கப்பட்டு டிஎஸ்பி வினோத் தலைமையிலான தொப்பூர் போலிசார் நாட்டு துப்பாக்கிகளை மீட்டுசென்றனர்.
இதனை தர்மபுரி நகர போலிஸ் ஸ்டேசனில் பார்வையிட்ட டி எஸ்பி வினோத் . பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலிசார் மூலம் நாட்டுதுப்பாக்கிகள் வைத்திருந்தால் ஆயுததடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனையடுத்து மர்ம நபர்கள் 2 நாட்டுதுப்பாக்கிகளையும் 1 ஏர்கன்னையும் வீசிசென்றுள்ளனர் கிராம நிர்வாக அலுவலர் மூலம் தகவல் கிடைக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
வனத்துறை மற்றும் போலிசார் இணைந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சோதனை நடத்தப்படும் அப்போது நாட்டுத்துப்பாக்கிகளுடன் பிடிபட்டால் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.