ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடிய வீரரும், நேபாள் நாட்டின் நட்சத்திர வீரருமான சந்தீப் லமிசான்னே மீது 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். நேபாளம் அணிக்காக 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சந்தீப் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
மேலும் இவர் தற்போது நேபாள் அணியின் கேப்டனாகவும் செயலட்டு வருகின்றார். இந்த நிலையில் தான் சந்திப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் நண்பர் ஒருவர் மூலம் சந்திப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனை எடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் தம்மை சந்திப் ரூமுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து சந்திப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது அந்தப் பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று மருத்துவச் செக்கப்ளும் நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து சந்திப்க்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் இதற்கு சந்தீப், இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், நான் அப்பாவி என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
— Sandeep Lamichhane (@Sandeep25) September 9, 2022