இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்து வருபவர் கே.எல்.ராகுல். கர்நாடகாவை சேர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு காதல் வதந்திகளில் சிக்கி உள்ளார்.தற்போது பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி உடன் நெருங்கி பழகி வந்தார் கே.எல்.ராகுல். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சுனில் ஷெட்டியின் மகள் தான் அதியா ஷெட்டி.
கே.எல்.ராகுல் உடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, அவருடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த அதியா ஷெட்டி, கடந்த ஆண்டு தங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்தார்.
இந்நிலையில், தற்போது இந்த ஜோடியின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதியா ஷெட்டி – கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவது குறிப்பிடத்தக்கது