கடந்த 2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட பொலார்ட், கடந்த 12 ஆண்டுகளாக அந்த அணிக்காக மட்டுமே விளையாடி வந்தார்.இந்த நிலையில், கடந்த சீசனில் மும்பை அணி பொலார்டை 6 கோடி ரூபாய்க்கு தக்க வைத்து கொண்டது.கடந்த சீசனில் மும்பை அணி கடைசி இடத்தை பிடித்தது.
இதற்கு முக்கிய காரணம், பொலார்ட் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாது தான் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். கடந்த சீசனில் அவர் 11 போட்டியில் விளையாடி 144 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.தற்போது மும்பை அணியில் பிராவீஸ், டிம் டேவிட் போன்ற அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளதால், பொலார்ட்க்கு தேவை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மும்பை அணி பொலார்டை விடுவித்து, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கேமிரான் கிரினை கைப்பற்ற முடிவு எடுத்துள்ளது. எனினும் மும்பை அணியின் இந்த முடிவு பொலார்ட்க்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
💙 #OneFamily @mipaltan pic.twitter.com/4mDVKT3eu6
— Kieron Pollard (@KieronPollard55) November 15, 2022
இதனால் மும்பை அணியின் மீதுள்ள விஸ்வாசம் காரணமாக, இனி ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக பொலார்ட் அறிவித்துள்ளார். பொலார்டின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.