இந்திய அணியின் வீரரும் ,CSK வின் நட்சத்திர ஆட்டக்காரருமான் அம்பாதி ராயுடு காலத்தில் சண்டையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிக பிரபலமான உள்நாட்டு தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் இன்றைய போட்டியில் பரோடா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தான் பரபரப்பு சண்டை நடந்தது. சௌராஷ்டிரா அணி இன்னிங்ஸின் 9வது ஓவரில் ஷெல்டன் ஜாக்சன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு பரோடா அணிக்காக ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்தார். அப்போது ஜாக்சனின் உடற்மொழி மற்றும் செயல்பாடுகள் ராயுடுவை சீண்டியுள்ளன.
Rayudu Vs Sheldon Jackson verbal fight. After the incident happened Sheldon tried to swing every ball and played 4 dots in a Row and on the last ball he got bowled. classic example of Ego winning over class#AmbatiRayudu #sheldonjackson #SMAT2022 pic.twitter.com/xwHO14LqVE
— Soham (@Soham2982) October 12, 2022
வேண்டுமென்றே பந்தை எதிர்கொள்வதற்காக ஷெல்டன் ஜாக்சன் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் போட்டியும் தாமதித்துக்கொண்டே சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அம்பத்தி ராயுடு நேராக ஷெல்டனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு ஷெல்டனும் பதிலடி கொடுக்க தவறவில்லை.எனவே இருவரும் மோதிக்கொண்டதால் இந்த ஆட்டம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது