புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இளைஞர்கள் சிலர் பெட்ரோல் நிரப்ப நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் வரிசையில் நிற்காமல் பெட்ரோல் நிரப்ப முயன்றதாக கூறப்படுகிறது, இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் அந்த நபரை கடுமையாக தாக்கி உள்ளனர், இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி தற்போது அது வெளியாகியுள்ளது,
மேலும் இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான நபரோ அல்லது பெட்ரோல் பங்கை சார்ந்தவர்களோ இது வரை மேட்டுபாளையம் காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்க வில்லை என்றும், அதே போல் தாக்குதலில் ஈடுப்பட்டது ரவுடி கும்பல் இல்லை கிரிகெட் விளையாடி விட்டு வந்த இளைஞர்கள் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்..