பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றுள்ள தனலட்சுமி பல சண்டைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஸ்வீட் ஃபேக்டரி டாஸ்க்கில் பணத்தை கல்லாப்பெட்டியில் வைக்காமல் மறைத்து விளையாடினார். இதனால் வீக்கெண்ட் எபிசோடில் தனலெட்சுமியை கடுமையாக விளாசினார் நடிகர் கமல்ஹாசன்.
மேலும் இதுபோன்ற மோசடிகளை ஏற்க முடியாது என்ற கமல், தனலெட்சுமியின் வெற்றியை பறித்து விக்ரமனிடம் கொடுத்தார்.இதன் காரணமாக கதறி அழுதார் தனலட்சுமி.இந்நிலையில் தனலெட்சுமியின் தாயார் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசியுள்ளார். தனலெட்சுமி குறித்து பரவும் நெகட்டிவான விஷயங்களுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, தனலெட்சுமி வீட்டில் எப்படி இருப்பாரோ அப்படிதான் பிக்பாஸ் வீட்டிலும் உள்ளார். அவருக்கு நடிக்கவே தெரியாது அதுதான் பிரச்சனை.அவளுக்கு கோபவம் வரும், அதை உடனே வெளிக்காட்டிவிடுவாள். அந்த கோபம் அடுத்த கொஞ்ச நேரத்திலேயே சரியாகிவிடும். தனலெட்சுமி தனக்கு பிடித்தவர்களிடம் சண்டை போடுவார், திரும்ப திரும்ப பேசுவார். அந்த குணம் மாறிவிடும் என நம்புகிறோம்.

தனலெட்சுமிக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. என் மகளை பற்றி தவறாக பேசுபவர்கள் எப்படி பட்டவர்கள் என்பது எனக்கு தெரியும் என கூறியுள்ளார் தனலஷ்மியின் தாய்