மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் தங்கபதக்கம் வென்று முதலிடம் வென்ற மாணவியை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அழைத்து கேடயம் வழங்கி பாராட்டி வாழ்த்துகளை கூறினார்.

வேலூர்மாவட்டம்,தோட்டப்பாளையத்தை சேர்ந்த செய்தியாளர் ராஜ்குமார் என்பவரின் மகள் ஜெருஷா ஜாஸ்மின் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியான இவர், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் 64- 66 கிலோ வரையிலான எடை பிரிவில் ஜெருஷா ஜாஸ்மீன் பங்கேற்று தங்கபதக்கம் வென்று முதலிடம் பிடித்தார் . அவரை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் அழைத்து கேடயம் வழங்கி பாராட்டினார் . இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்