நாடு முழுவதும் வருகிற 24ம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். தீபாவளிக்கு முந்தைய இரண்டு நாட்களும்(சனி,ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால், ஊருக்கு செல்வதில் சிரமம் இருக்காது. அதே வேளையில், தீபாவளிக்கு அடுத்த நாள் செவ்வாய் கிழமை வேலைநாள் என்பதால் சொந்த ஊர் சென்றுவிட்டு பணிக்கு திரும்புவது சிரமமாக இருக்கும். முக்கியமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளிக்கு முந்தைய நாட்கள் விடுமுறை விடப்பட்டு தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊரில் இருந்து திரும்ப வசதியாக இருந்தது. அதுபோல இந்த ஆண்டும் விடுமுறை விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த விடுமுறையை நவம்பர் 12-ந்தேதி இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கலாம் எனவும் அரசு ஆலோசித்து வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.