பிலிப்பைன்ஸ் நாட்டில் வெப்பமண்டல புயலால் பெய்து வரும் தொடர் கனமழையினால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மலைகளின் இரு புறமும் வரும் தண்ணீர் ஆறுகளில் கலப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பல கிராமங்கள் வெள்ள காடாக காட்சியளிக்கின்றன. அத்துடன் மலை கிராமங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.

வெள்ளம், பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவிக் சிக்கி பிலிப்பைன்ஸில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தெற்கு பிலிப்பைன்ஸில் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காடுகள் அழிப்பு காரணமாக பிலிப்பைன்ஸில் வெள்ளப்பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. வனங்கள் அழிக்கப்படுவதால் சேறு, குப்பைகளுடன் கலந்து வரும் திடீர் வெள்ளம், நூறுக்கணக்கானோர் உயிரிழக்க காரணமாக அமைந்து விடுகிறது எப சூழலியல் ஆர்வலர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
