Skygain News

சென்னை புறநகர் ரயில்களில் AC பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு..!

சென்னையில் இயங்கக்கூடிய புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வெகுநாட்களாக வைத்து இருந்தனர். இதை தொடர்ந்து புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்த அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. சாதாரண பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டிகள் மட்டுமே புறநகர் ரயில்களில் இருந்து வந்த நிலையில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. தென்னக ரயில்வே உடன் இது குறித்து கூட்டு சேர்ந்து அரசு முயற்சிகள் எடுத்து வருவதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்த உள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக குளிர்சாதன ஏசியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் இயக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. பல லட்சம் பயணிகள் தினந்தோறும் புறநகர் ரயில்களில் பயணித்து வரும் நிலையில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கான முக்கிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது. மேலும் டெண்டர் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள http://eprocure.gov.in/eprocure/app/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.