மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைக்கா நிறுவனமும், மணிரத்னமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.
அவர் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தை திரை காண ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.மேலும் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்திருப்பது சீரியல் நடிகையும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் தான். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#DeepaVenkat dubbed for #AishwaryaRaiBachchan in #PS1 #PonniyinSelvan #PonniyinSelvan1 #AishwaryaRai pic.twitter.com/szoGeKRPeZ
— Siva Prasanth (@Sivaprasanth5) September 8, 2022