இந்திய அணி T20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த தீபக் ஹூடா அணியுடன் இணைந்து ஆஸ்திரேலியா புறப்பட்டார். பிசிசிஐ- ஆல் ஆதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 15 வீரர்கள் மட்டும் முதலில் ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர் என்றும் பேக் அப் வீரர்கள் தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் தொடரை முடித்துக்கொண்டு செல்வார்கள் என்றும் கூறப்பட்டது.
ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமக விலகியுள்ளதால் மொத்தம் 14 வீரர்கள் இன்று காலை புறப்பட்டனர்.இந்நிலையில் இதில் ஒரு நற்செய்தியும் கிடைத்துள்ளது. அதாவது நட்சத்திர ஆல்ரவுண்டர் தீபக் ஹுடாவும் இந்திய அணியுடன் பயணித்துள்ளார்.

முதுகில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் நீண்ட ஓய்வில் இருந்தார். இதனால் தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அவர் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.இந்த செய்தி நித்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது