புதுச்சேரியில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மாதத்தில் இருமுறை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆளுநர் மாளிகையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் .
அந்த வகையில் இந்த மாதத்திற்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்கள் குறைபாடுகளையும், கோரிக்கைகளையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினர். கோரிக்கைகளை பெற்றுக்கோண்ட ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிநளித்தார். மக்கள் சந்திப்பின் போது ஆளுநர் மாளிகை அதிகாரிகள் உடனிருந்தனர்.