பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஜி.பி.முத்து ,ஷாந்தி ,அசல் ,ஷெரினா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.இந்நிலையில் நேற்றைய தினம் டாஸ்கின் போது தனலட்சுமி, மணிகண்டன் இடையே சண்டை வெடித்தது.
இருவரும் அடித்து கொள்ளாத குறையாக சண்டை போட்டு கொண்டனர். இந்த சண்டையின் போது மணிகண்டன், “உன் வயது என்ன? என்னை எப்படி ‘டா’ என்று சொல்கிறாய்?” என எகிற, பதிலுக்கு தனலட்சுமியும் ஆவேசமாக கத்த பிக்பாஸ் வீடே களேபரமானது. அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்துவதே மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தது.
Ennada nadakuthu inga 😂😂 asingama asingama thittitukuranga appuram vanthu pasatha poliyururanga ennaku puriyala 😳 #BiggBossTamil #tamilbiggboss #tamilbiggboss #TamilBiggboss #BiggBoss6Tamil pic.twitter.com/iGQ97U9TzU
— TROLL_BIGGBOSS_TAMIL (@goglekumar) November 9, 2022
இந்நிலையில் இந்த சண்டைக்கு பிறகு தனலட்சுமி அழுக, அவரை மைனா சமாதானம் செய்கிறார். அப்போது மணிகண்டன் எழுந்து தனலெட்சுமி நோக்கி நடந்து சென்று தனலெட்சுமியை ‘சிஸ்டர்’ என கூறி சமாதானம் செய்கிறார். இதை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் கைதட்டி நெகிழ்ந்தனர்.