பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் தனலட்சுமி. ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தனலட்சுமி ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். சாமானிய மக்களில் ஒருவராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் இந்த வாரம் தனலட்சுமி எவிக்ஷனுக்கான நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளதால் அவரை வெளியே அனுப்ப வேண்டும் என சூளுரைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கொடுக்கப்பட்ட நடனமாடும் டாஸ்க்கில் வர்றியா பாடலுக்கு சக போட்டியாளரான மணிகண்டனுடன் சேர்ந்து செம்ம ஆட்டம் போட்டார்.

தனலட்சுமியின் ஆட்டத்தை பார்த்த ஹவுஸ்மெட்ஸும் ஆடிப்போயினர். தனலட்சுமியின் பர்ஃபார்மன்ஸை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் என பாராட்டி தள்ளி வருகின்றனர். ஒரே ஒரு நடனத்தால் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் எண்டெர்டெய்ன் செய்து கலக்கி விட்டார் தனலட்சுமி.