Skygain News

தமிழில் பிளாப் ஆன தனுஷ் படத்திற்கு தெலுங்கில் இப்படி ஒரு வரவேற்பா ? அடேங்கப்பா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடகர் , தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களை கொண்ட தனுஷ் சமீபகாலமாக தொடர்ந்து தோல்விப்படங்களாக கொடுத்து வந்தார். அப்போது தான் மித்திரன் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவரை தோல்வியில் இருந்து மீட்டது.

கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. மேலும் நூறு கோடி வசூல் செய்து சாதனையும் படைத்துள்ளது திருச்சிற்றம்பலம் திரைப்படம். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீ ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான படம் 3. தனுஷ் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருந்தார். தற்போது தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், அறிமுகமானதே இப்படத்தின் மூலம் தான். குறிப்பாக இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் ஹிட் ஆனது.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அப்படத்துக்கு தற்போது திடீரென மவுசு அதிகரித்து உள்ளது. 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். அப்படி ரிலீசான படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறதாம். அங்கு இப்படத்தின் 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகி ஓடி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.