தனுஷின் அறிமுக படமான துள்ளுவதோ இளமை படத்தில் கதை மற்றும் வசனம் எழுதிய செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனரானார். முதல் படத்திலேயே தன் தனித்துவத்தை உணர்த்திய செல்வராகவன் தொடர்ந்து 7 G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் , என்ன போன்ற தரமான படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார் செல்வராகவன்.
மேலும் தனுஷுடனான இவரது கூட்டணி வெற்றி கூட்டணியாகவே கருதப்பட்டு வருகின்றது.கடைசியாக இவர்களது கூட்டணியில் மயக்கம் என்ன திரைப்படம் வெளியானது. அதன் பிறகு 11 வருடங்கள் கழித்து நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
தனுஷ், செல்வராகவன், யுவன் ஷாநகர் ராஜா கூட்டணியில் பல வருடங்களுக்கு பிறகு ஒரு படம் வெளியானதால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.அவர்களின் எதிர்பார்ப்பை இப்படம் கிட்டத்தட்ட பூர்த்தி செய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் முதல் பாதி பேய் படமாகவும், இரண்டாம் பாதி சைக்கோ திரில்லர் படமாகவும் அமைந்து ரசிகர்களை ரசிக்க செய்தது.இந்நிலையில் இவர்கள் மீண்டும் இணையப்போவதாக தகவல் வந்துள்ளது. அதாவது நானே வருவேன் படத்தை தயாரித்த கலைப்புலி தாணு இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை மீண்டும் தயாரிப்பதாகவும், இப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாவதாகவும் தகவல் வந்துள்ளது.