தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து ரசிகர்களுக்கு அவரது அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான நானே வருவேன் இம்மாதம் வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.அந்த வகையில் திருச்சிற்றம்பலம்,வாத்தி ஆகிய படங்களுக்கு பிறகு ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகவுள்ளது.தனுஷின் முதல் பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வில்லனாக நடிகர் விநாயகம் நடிக்கவுள்ளார்.1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாகிறது.இந்நிலையில் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது. தென்காசியில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 120 நாட்கள் நடைபெற உள்ளது