தனுஷ் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியினால் புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார். அதற்கு முன்பு அவரது படங்கள் சில தொடர்ந்து தோல்வியை சந்தித்து வர திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவரை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது.
இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. என்னதான் இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பொன்னியின் செல்வன் படத்துடன் நானே வருவேன் வெளியானாலும் இப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து தனுஷ் இயக்குனர் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கப்பட்டது. தற்போது தென்காசியில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் தகவல் வந்துள்ளது.