தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் கொடுத்த வெற்றியினால் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். ஹாலிவுட், பாலிவுட் என அசத்தி வந்த தனுஷ் சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். எனவே கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த தனுஷிற்கு தக்க சமயத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கைகொடுத்தது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியன் இப்படம் அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் காரணமாக தனுஷின் சம்பளமும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து செல்வராகவனின் நானே வருவேன், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தனுஷ் தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது ட்விட்டரில் தனுஷை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 11 மில்லயனை தொட்டிருக்கிறது. வேறு எந்த தமிழ் நடிகருக்கும் ட்விட்டரில் 11 மில்லியன் ஃபாலோயர்கள் இல்லை. கடந்த 2021ம் ஆண்டு 10 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றார்.

இந்த ஆண்டு 11 மில்லியனை தொட்டு சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் செல்வராகவனின் இயக்கத்தில் உருவான நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.