தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு நானே வருவேன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் கடந்த சில படங்களாக தோல்வியை சந்தித்து வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார்.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்நிலையில் செல்வராகவன், தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு நானே வருவேன் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இதன் காரணமாக இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. காதல் கொண்டேன் மற்றும் வாலி ஆகிய படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை இப்படம் கண்டிப்பாக ஏற்படுத்தும் என ரசிகர்களால் சொல்லப்படுகின்றது.இதைத்தொடர்ந்து இம்மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியாகிவுள்ளது.

அதாவது இப்படத்திற்கு தணிக்கை குழு U /A சான்றீதழ் கொடுத்துள்ளதாகவும், இப்படம் 2 மணி நேரம் 15 நிமிடம் ஓடக்கூடியதாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.